2 குழந்தைகளை கிணற்றில் தள்ளிய தாய் - தானும் தற்கொலைக்கு முயன்ற சோகம்

குடும்ப பிரச்சினையால் 2 குழந்தைகளை கிணற்றில் தள்ளிவிட்டு தாயும் தற்கொலைக்கு முயன்றதில் 3 வயதான பெண் குழந்தை உயிரிழந்தது.
x
சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகேயுள்ள பெருமாகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் ஆனந்தன்.  கேஸ் சிலிண்டர் சப்ளை செய்யும் வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு 5 மற்றும் 3 வயதில் 2 பெண் குழந்தைகள். கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்த நிலையில் மன உளைச்சலுக்கு ஆளான தனலட்சுமி தன் 2 குழந்தைகளை விவசாய கிணற்றில் தூக்கி போட்டார். பின்னர் தானும் கிணற்றில் குதித்து தற்கொலை முயன்றார். இதையறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக 3 பேரையும் மீட்டனர். இதில் 3 வயது பெண் குழந்தை உயிரிழந்த நிலையில் தனலட்சுமியும் மற்றொரு மகளும் உயிருடன் மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து மகுடஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்