தடையை மீறி போராட்டம் - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு பதிவு
பள்ளியில் மதமாற்றம் செய்ய கட்டாயப்படுத்தியதன் காரணமாக தஞ்சை மாணவி தற்கொலை செய்து கொண்டதாக பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது.
பள்ளியில் மதமாற்றம் செய்ய கட்டாயப்படுத்தியதன் காரணமாக தஞ்சை மாணவி தற்கொலை செய்து கொண்டதாக பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது.இந்த நிலையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜக நிர்வாகிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மதமாற்ற தடை சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் எனவும் மாணவி தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.பி சி.பி ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ நயினார் ராஜேந்திரன், பாஜக மாநில பொதுச் செயலாளர் கரு நாகராஜன் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
Next Story