வெள்ளத்தால் சேதமடையாத வீட்டை வடிவமைத்த சிறுமிக்கு பிரதமர் மோடி பாராட்டு

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த சிறுமி விசாலினிக்கு, பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக, ராஷ்டிரிய பால் புரஸ்கார் விருது மற்றும் 1 லட்சம் ரூபாய் ரொக்க பரிசை வழங்கினார்.
x
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த சிறுமி விசாலினிக்கு, பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக, ராஷ்டிரிய பால் புரஸ்கார் விருது மற்றும் 1 லட்சம் ரூபாய் ரொக்க பரிசை  வழங்கினார்.
வெள்ளத்தால் உயிர் மற்றும் உடைமை சேதம் ஏற்படாத வகையில் சிறுமி விசாலினி, வீடு ஒன்றை வடிவமைத்துள்ளார். இதற்காக, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காணொலி காட்சி அரங்கத்தில் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி முன்னிலையில் பிரதமர் மோடி சிறுமி விசாலினியை வாழ்த்தி ஆன் லைன் மூலம் விருது வழங்கினார். அத்துடன் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது. பிரதமரிடம், பரிசு பெற்றது மகிழ்ச்சியளிப்பதாக, சிறுமி விசாலினி கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்