தேவாலயத்தில் உடைக்கப்பட்ட சிலை - மர்ம நபரை தேடி வரும் போலீசார்

தேவாலயத்தில் இருந்த சிலையை உடைத்த மர்ம நபர்களை சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
x
தேவாலயத்தில் இருந்த சிலையை உடைத்த மர்ம நபர்களை சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை மாவட்டம் ராமநாதபுரம் பகுதியில் டிரினிட்டி ஹோலி  தேவாலயம் உள்ளது. நேற்று இரவு தேவாலயத்தின் வளாகத்தில் கண்ணாடி உடைக்கும் சத்தம் கேட்டு காவலாளி சென்று பார்த்துள்ளார். அப்போது மர்ம நபர் ஒருவர் தேவாலயத்தில் இருந்த செபாஸ்டியரின் சிலையை உடைத்துள்ளார். இதனையடுத்து அந்த நபரை காவலாளி தடுக்க முற்படுவதற்கு முன்பு அந்த நபர் இரு சக்கர வாகனத்தில் ஏறி தப்பி சென்றுள்ளார். இது தொடர்பாக போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்