தந்தி செய்தி எதிரொலி; அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு - பரமக்குடி விவசாயிகள் மகிழ்ச்சி
தந்தி டிவி செய்தி எதிரொலியால், பரமக்குடியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
தந்தி டிவி செய்தி எதிரொலியால், பரமக்குடியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். பார்த்திபனூர், கள்ளிக்குடி, கொத்தங்குளம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் எக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. ஏக்கருக்கு 40 முதல் 50 மூடைகள் வரை நெல் மகசூல் கிடைத்த நிலையில், அதை விற்க முடியாமல் அவதி அடைந்தனர். இதைத் தொடர்ந்து, நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்குமாறு கோரிய செய்தி, தந்தி தொலைக்காட்சியில் வெளியானது. இதைத் தொடர்ந்து, தற்போது கொள்முதல் நிலையம் பரமக்குடி அருகே நெல்மடூர் கிராமத்தில் இன்று திறக்கப்பட்டது. இது விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது
Next Story