25 ஆண்டுகளாக ஆக்கிரமித்து வைத்திருந்த ரவுடியின் சொத்துகள் மீட்பு - அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

25 ஆண்டுகளாக ஆக்கிரமித்து வைத்திருந்த ரவுடியின் சொத்துகள் மீட்பு - அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
x
25 ஆண்டுகளாக ஆக்கிரமித்து வைத்திருந்த ரவுடியின் சொத்துகள் மீட்பு - அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை பிரபல ரவுடி படப்பை குணா கடந்த 25 ஆண்டுகளாக ஆக்கிரமித்து வைத்திருந்த அரசுக்கு சொந்தமான 5 கோடி மதிப்பிலான ஏரி நிலத்தை வருவாய்த்துறையினர் அதிரடியாக மீட்டனர்.ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த பிரபல ரவுடி படப்பை குணா கடந்த ஆறு மாதங்களாக தலைமறைவாக இருந்து வருகிறார். இதனிடையே ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் அருகே மதுரமங்கலம் பகுதியில் அரசுக்கு சொந்தமான 5 ஏக்கர் ஏரி நிலத்தை கடந்த 25 ஆண்டுகளாக படப்பை குணா ஆக்கிரமித்து வைத்துள்ளார். அந்த இடத்தை போலீசார் பாதுகாப்புடன் காஞ்சிபுரம் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்டனர். இதன் மதிப்பு 5 கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் 300 கோடி ரூபாய் மதிப்பிலான நீர் நிலை ஆக்கிரமிப்பு இடங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் இனி வரும் நாட்களில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடக்கும் என மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்