திறக்கப்படாத நேரடி நெல் கொள்முதல் நிலையம் - பதிவு செய்து 20 நாட்களாக காத்திருக்கும் விவசாயிகள்..!

பரமக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் 5 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டது
x
பரமக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் 5 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. என்எல்ஆர், கோ 51, ஜேஜிஎல்1798, பொன்னி உள்ளிட்ட 120 முதல் 140 நாள் ரகங்கள் பயிரிடப்பட்டன. 10 ஆண்டுகளுக்கு பிறகு பருவமழை கைகொடுத்ததால், ஏக்கருக்கு 40 முதல் 50 மூட்டைகள் வரை விளைச்சல் கிடைத்துள்ளது. இதனை அரசு கொள்முதல் நிலையங்களை விற்பனை செய்ய ஆன்லைனில் பதிவு செய்து 20 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் காத்திருக்கின்றனர். திடீரென மழை பெய்தால் நெல் மூட்டைகள் வீணாகும் அபாயம் இருப்பதால், உடனடியாக அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்