16 வயது சிறுமி தனது கைக்குழந்தையுடன் தீக்குளிப்பு..

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே 16 வயது சிறுமி தனது 7 மாத கைக்குழந்தையுடன் தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
16 வயது சிறுமி தனது கைக்குழந்தையுடன் தீக்குளிப்பு..
x
16 வயது சிறுமி தனது கைக்குழந்தையுடன் தீக்குளிப்பு.. 

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே 16 வயது சிறுமி தனது 7 மாத  கைக்குழந்தையுடன் தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  காரத்தொழுவை சேர்ந்த அந்த சிறுமி தனது கைக்குழந்தையுடன் பெற்றோருடன் வசித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில்  வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அச்சிறுமி தனது பச்சிளம் குழந்தையுடன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. அலறி துடித்த அச்சிறுமி மற்றும் குழந்தையை அக்கம்பக்கத்தினர் மீட்டு தீக்காயங்களுடன், ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக கோவை அழைத்து செல்லப்பட்டபோது இருவரும் உயிரிழந்தனர்.இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Next Story

மேலும் செய்திகள்