பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறன் மாணவர்கள் ! பரிசோதனைக்கு மருத்துவமனை அலைக்கழிப்பு..!

10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான உடல் பரிசோதனை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. இடமில்லாத காரணத்தால் மாற்றுத்திறனாளி மாணவர்கள் தரையில் அமர வைக்கப்பட்டுள்ளனர்.
x
10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான உடல் பரிசோதனை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. இடமில்லாத காரணத்தால் மாற்றுத்திறனாளி மாணவர்கள் தரையில் அமர வைக்கப்பட்டுள்ளனர். சுமார் 3 மணி நேர இழுத்தடிப்புக்கு பிறகு, அங்கு வந்த மருத்துவமனை ஊழியர்கள், விண்ணப்பங்களை பெற்று மாணவர்களுக்கு உடல் பரிசோதனை மேற்கொண்டனர். அதற்கான சான்றிதழ் உடனடியாக வழங்கப்படாததால் மாற்றத்திறனாளி மாணவர்கள் அவதியுற்றனர். கொரோனா பரவல் சூழலில், அரசு மருத்துவமனை வளாகத்தில் மாணவர்கள் நீண்ட நேரம் காக்க வைக்கப்பட்ட சம்பவத்தால் அதிருப்தி எழுந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்