பெண் கவுன்சிலர்கள் காரில் கடத்தப்பட்டதால் பரபரப்பு

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில், 6 அ.தி.மு.க உறுப்பினர்களும், 5 தி.மு.க உறுப்பினர்களும் உள்ளனர். ஒன்றியத்தின் தலைவராக அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஜெகநாதன் செயல்பட்டு வரும் நிலையில், அவருக்கு எதிராக உறுப்பினர்கள் தீர்மானம் கொண்டுவர திட்டமிட்டதாக தெரிகிறது
x
சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில், 6 அ.தி.மு.க உறுப்பினர்களும், 5 தி.மு.க உறுப்பினர்களும் உள்ளனர். ஒன்றியத்தின் தலைவராக அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஜெகநாதன் செயல்பட்டு வரும் நிலையில், அவருக்கு எதிராக உறுப்பினர்கள் தீர்மானம் கொண்டுவர திட்டமிட்டதாக தெரிகிறது. இதையடுத்து ஜெகநாதன் தனது ஆதரவு கவுன்சிலர்களுடன் பவானி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு காரில் திரும்பியுள்ளார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே வந்தபோது காரை வழிமறித்த கும்பல், 2 பெண் கவுன்சிலர்களை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஜெகநாதன் அளித்த புகாரின் பேரில் குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்