கோவையில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி - அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைக்கிறார்

கோவையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று தொடங்கி வைக்கிறார்.
x
கோவையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று தொடங்கி வைக்கிறார். மாவட்டம் நிர்வாகம் மற்றும் கோவை ஜல்லிக்கட்டு பேரவை இணைந்து நடத்தும் ஜல்லிக்கட்டு போட்டி செட்டிப்பாளையம் பகுதியில் நடைபெறுகிறது. இதில் 700 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க உள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த போட்டிகளை காண பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்