எம்.ஜி.ஆரின் 105வது பிறந்த நாள் விழா- மா.சுப்பிரமணியன் மலர் தூவி மரியாதை ! | #ThanthiTv

மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆருக்கு மலர் தூவி மரியாதை செலுத்துவதை தமிழக அரசு பெருமையாகக் கருதுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
x
மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆருக்கு மலர் தூவி மரியாதை செலுத்துவதை தமிழக அரசு பெருமையாகக் கருதுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இன்று எம்ஜிஆரின் 105 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கிண்டி எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, எம்ஜிஆர் 10 ஆண்டுகள் தமிழக முதல்வராக சிறப்பாக பணியாற்றியவர் என்றும், அவரது பிறந்த நாளில் மலர் தூவி மரியாதை செலுத்துவதை தமிழக அரசு பெருமையாக கருதுவதாகவும் குறிப்பிட்டார்

Next Story

மேலும் செய்திகள்