வட மாநில இளைஞருக்கு அரிவாள் வெட்டு - 4 இளைஞர்கள் கைது

திருவள்ளூரில் வட மாநில இளைஞரை அரிவாளால் வெட்டியதாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
x
திருவள்ளூரில் வட மாநில இளைஞரை அரிவாளால் வெட்டியதாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தண்டலம் பகுதியில்  உள்ள தனியார் நிறுவனத்தில் சுமார் 20 வடமாநில இளைஞர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், அவர்களில் சிலர் பொருட்களை வாங்குவதற்காக திருவள்ளூர் மார்க்கெட்டிற்கு வந்துள்ளனர். அப்போது,  அதே பகுதியை சேர்ந்த 4 இளைஞர்கள், வடமாநில இளைஞர்களால் தங்கள் வேலை பறிக்கப்படுவதாக கூறி, அவர்களிடம் வாக்குவாதத்தில ஈடுபட்டு கத்தியால் தாக்கியுள்ளனர். இதில், அமித்குமார் என்ற வடமாநில இளைஞரின் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இது தொடர்பாக, விஜய், வேலு, மஜித் மற்றும் மொய்னுதீன் என்ற 4 இளைஞர்களை கைது செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்