ரவிச்சந்திரனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டித்து தமிழக அரசு உத்தரவு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் ரவிச்சந்திரனுக்கு, மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
x
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் ரவிச்சந்திரனுக்கு, மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது. மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரவிசந்திரனுக்கு, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 17ஆம் தேதி, தமிழக அரசு ஒரு மாதம் பரோல் வழங்கியது. பின்னர், டிசம்பர் மாதம் 16ஆம் தேதி, மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டது. இதனிடையே, பரோல் முடிவடைந்து இன்று சிறைக்கு செல்ல வேண்டிய நிலையில், இரண்டாவது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.  


Next Story

மேலும் செய்திகள்