"நீங்கள் எப்போதும் சாம்பியன் தான்.. " சாய்னா நேவாலிடம் மன்னிப்பு கேட்டார் நடிகர் சித்தார்த்

பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவாலிடம் நடிகர் சித்தார்த் மன்னிப்பு கோரி உள்ளார்.
x
பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவாலிடம் நடிகர் சித்தார்த் மன்னிப்பு கோரி உள்ளார். பஞ்சாப்பில் பிரதமர் மோடிக்கு ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு குறித்து பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் டுவிட்டரில் வெளியிட்ட கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் நடிகர் சித்தார்த் பதிவிட்ட கருத்து கடும் சர்ச்சைக்குள்ளானது. இரட்டை அர்த்தம் தொனிக்கும் வகையில் கருத்து பதிவிட்ட சித்தார்த் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம் எழுதி உள்ளது. இந்நிலையில், சாய்னா நேவாலிடம், நடிகர் சித்தார்த் மன்னிப்பு கோரி உள்ளார். இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது மூர்க்கமான, சரியாக புரிந்து கொள்ளப்படாத நகைச்சுவைக்காக மன்னிப்பு கோருவதாகவும், தான் எப்போதும் பெண்ணியத்திற்கு ஆதரவானவன் எனவும் பெண் என்பதால் உங்களை தாக்கும் நோக்கில் அந்த கருத்தை பதிவிடவில்லை என்றும் தெரிவித்து உள்ளார். மேலும், நீங்கள் என்றும் எனது சாம்பியன் என்றும் அதில் சித்தார்த் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்