வெறிச்சோடிக் காணப்படும் ஊட்டி- கழுகுப் பார்வை காட்சிகள் | Ooty

முழு ஊரடங்கு காரணமாக சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டு இருப்பதால் நீலகிரி மாவட்டம் ஊட்டி வெறிச்சோடி காணப்படுகிறது.
x
உதகையில்  முழு ஊரடங்கால் வெறிச்சோடிய சாலைகள்.  பிரேத்தியேக கழுகுபார்வையில் காணலாம்

   இந்தியாவில் கொரோனா  நோய் தொற்றில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. குறிப்பாக தமிழகத்திலும் இதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தமிழக அரசு கொரோன நோய் தொற்றை கட்டுபடுத்த பல்வேறு தடுப்பு நடடிவக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக ஞாயிற்றுக்கிழமை   முழு ஊரடங்கும் மற்ற நாட்களில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை என பகுதி நேர ஊரடங்கும் அமலில் உள்ளது. மற்ற நேரங்களில் மக்கள் வெளியே வர அனுமதியில்லை என கடுப்பாடுகளை விதித்தது. இருப்பினும் தொற்றின் வேகம் குறைய வில்லை எனவே இன்று ஞாயிற்றுக்கிழமை  தீவிர முழு ஊரடங்கை அரசு அமல்ப்படுத்தியுள்ளது.  ஊரடங்கால் உதகையில் கமர்சியல் சாலை, தாவரவியல் பூங்கா சாலை, எட்டின்ஸ் சாலை, குன்னூர் சாலை, மைசூர் சாலை, ஏடிசி சாலை, மார்கெட் சாலை, மத்திய பேருந்து சாலை, குதிரை பந்தய சாலை, நகராட்சி சந்தை, படகு இல்ல சாலை என அனைத்து சாலைகளுமே வெறிச்சோடி காணப்படுகிறது. இந்த  காட்சிகளை கழுகு பார்வையில் காணலாம். காவல்துறையினரும் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் தொடர்ந்து சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். இப்பணியில் அவரச தேவைகளுக்காக வருபவர்களை மட்டுமே  அனுமதிப்பதாகவும், தேவையில்லாமல் யாரேனும் வந்தால் அவர்களது வாகனம் பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யபட்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்