ரயில்வே பெண் போலீசை பலாத்காரம் செய்ய முயற்சி - சேலம் டி.எஸ்.பி.யின் ஜீப் டிரைவர் கைது

ஈரோட்டில் ரயில்வே பெண் போலீசை பலாத்காரம் செய்ய முயன்ற, சேலம் டி.எஸ்.பி.யின் ஜீப் ஓட்டுனர் கைது செய்யப்பட்டார்.
x
ஈரோடு பழைய ரயில்வே ஸ்டேஷன் பகுதியை சேர்ந்த செல்வன், சேலம் டி.எஸ்.பி. ஜீப் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஈரோடு ரயில்வேயில் பெண் போலீசாக பணி புரிந்து வருகிறார். அதே குடியிருப்பு பகுதியில், 29 வயதான பெண் ஒருவரும் ரயில்வே போலீசில் பணிபுரிந்து வருகிறார். கணவரை பிரிந்து தனியாக வசித்து வரும் அவரிடம், செல்வன் நட்பாக பழகி வந்தார். சம்பவத்தன்று அந்தப் பெண் போலீஸ் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த செல்வன், அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அந்த பெண் போலீஸ் கூச்சலிட்டு வீட்டை விட்டு வெளியேறி, சூரம்பட்டி காவல்நிலையத்தில், புகார் அளித்தார். இதையடுத்து செல்வன் மீது, வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்