சிறுமியை கடித்த வீட்டு வளர்ப்பு நாய் - அதிர வைத்த சிசிடிவி காட்சிகள்

சென்னையில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமியை வீட்டு வளர்ப்பு நாய் கடித்த நிலையில் நாயின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
சிறுமியை கடித்த வீட்டு வளர்ப்பு நாய் - அதிர வைத்த சிசிடிவி காட்சிகள்
x
சென்னையில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமியை வீட்டு வளர்ப்பு நாய் கடித்த நிலையில் நாயின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

நொளம்பூர் பகுதியில் உள்ள அபார்ட்மெண்ட் ஒன்றில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதனிடையே அங்கு வசிக்கும் ஜெயலட்சுமி என்பவர் தான் வளர்க்கும் நாயை வாக்கிங் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அந்த நாய் அங்கு விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமியை கடித்துள்ளது. இதில் படுகாயமடைந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், நாய் உரிமையாளரை கைது செய்தனர். இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவியில் பதிவாகி உள்ளது. அந்த காட்சிகளை பார்க்கலாம்..

Next Story

மேலும் செய்திகள்