தமிழகத்தில் ஒரே நாளில் 2.34 லட்சம் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி

தமிழகத்தில் சிறார்களுக்கான தடுப்பூசி முதல் நாளில் 2.34 லட்சம் பேருக்கு, செலுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
x
தமிழகத்தில் சிறார்களுக்கான தடுப்பூசி முதல் நாளில் 2.34 லட்சம் பேருக்கு, செலுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 15 முதல் 18 வயது உடையவர்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று தடுப்பூசி செலுத்தும் பணிகள் துவங்கபட்டது. தடுப்பூசி செலுத்த தகுதியானவர்களாக கண்டறியப்பட்ட 33.46 லட்சம் பேரில் முதல் நாளான நேற்று 2.34 லட்சம் சிறார்களுக்கு  தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை கூறியுள்ளது. அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 22 ஆயிரத்து 310 சிறார்களுக்கும், மதுரை சுகாதார மாவட்டத்தில் 20 ஆயிரத்து 167 சிறார்களுக்கும் , சேலத்தில் 19,094  சிறார்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.  சென்னையை பொருத்தவரை, 7 ஆயிரத்து 287 சிறார்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆயிரத்து 886 சிறார்களுக்கு மட்டும் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் அதிகம் கொண்ட சென்னையில் தடுப்பூசி போடும் பணி மந்த நிலையிலேயே காணப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்