பொங்கல் தொகுப்பு- முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி, பொங்கல் பரிசுத் தொகுப்பு அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.இந்த நிலையில், இன்று முதல் நியாயவிலைக் கடைகளில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.இதற்கு முன்னதாக சென்னை தலைமை செயலகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார். பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், கரும்பு உள்ளிட்ட , 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படுகிறது. 2 கோடியே 15 லட்சத்து 48 ஆயிரத்து 60 குடும்பங்களுக்கு, மொத்தம் ஆயிரத்து 88 கோடி ரூபாய் செலவில் வழங்கப்பட உள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பினை இடைவிடாமல் தொடர்ந்து விநியோகம் செய்திட ஏதுவாக, நியாய விலைக் கடைகளுக்கான விடுமுறை தினம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது
Next Story