தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது
தமிழகத்தில் புதிதாக ஆயிரத்து 728 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 52 ஆயிரத்து 856 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவுக்கு ஒரே நாளில் 6 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 36 ஆயிரத்து 796 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 662 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், 10 ஆயிரத்து 364 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 876 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை அடுத்து செங்கல்பட்டில் 158 பேருக்கும், கோவையில் 105 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் 80 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், திருப்பூரில் 52 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, தமிழகத்தில் 121 பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், 100 பேர் குணமடைந்துள்ளனர். 18 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story