ஒரே நாளில் ரூ.148 கோடிக்கு மதுவிற்பனை - புத்தாண்டை கோலாகலமாக கொண்டாடிய மதுபிரியர்கள்

ஆங்கில புத்தாண்டையொட்டி, தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 148 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
x
தமிழகத்தில் ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் வகையில் மதுபிரியர்கள், தமிழக அரசின் டாஸ்மாக் மதுவிற்பனை கடைகளில் குவிந்தனர்.அந்த வகையில், 2021ஆம் ஆண்டின் கடைசி நாளான நேற்று தமிழகத்தில் 148 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைப்பெற்றுள்ளது.அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் 41 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் 26 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் 25 கோடிக்கும் மதுவிற்பனை நடைபெற்றுள்ளது.இதேபோல் மதுரை மண்டலத்தில் 27 கோடிக்கும், கோவை மண்டலத்தில் 26 கோடி ரூபாய்க்கும் மது விற்பனை நடைப்பெற்றுள்ளது.கடந்த ஆண்டு ஆங்கில புத்தாண்டையொட்டி, ஒரே நாளில் 159 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையான நிலையில்,கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 11 கோடி ரூபாய் மதுவிற்பனை குறைந்துள்ளது.புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடை மற்றும் மழை காரணமாக டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை சரிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்