புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இளைஞர் கொலை

குடியாத்தம் அருகே புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
x
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மொத்தமாரிகுப்பம் பகுதியை சேர்ந்த வினித், ஒசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த அவர், தன் நண்பர்களுடன் புத்தாண்டை கொண்டாடினார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஆகாஷ் என்ற இளைஞர், பெண்கள் சிலரை கேலி கிண்டல் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை வினித் தட்டிக் கேட்கவே, ஆகாஷ் மற்றும் வினித்திற்கு இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆகாஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வினித்தை குத்தினார். இதில் படுகாயமடைந்த அவர், மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார். இதனிடையே கொலை செய்த ஆகாஷ் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரின் தந்தை அசோகன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்