தீவிரமாகிறதா ஊரடங்கு கட்டுப்பாடுகள்? - முதல்வர் ஆலோசனை

ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் தொடர்பாக, முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்...
x
கொரேனா பரவல் காரணமாக கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த முடிவு.

முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் காலை பத்து முப்பது மணி அளவில் சுகாதாரம், வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை

தமிழகத்தில் ஓமைக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கு  கட்டுபாடுகள், தளர்வுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் பண்டிகை காலங்களில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது குறித்து முதலமைச்சர்முகஸ்டாலின்  இன்று தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்துகிறார்

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் ஆலோசனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் , மருத்துவக்கல்வி இயக்குனர், பொது சுகாதாரத்துறை இயக்குனர்,மருத்துவ நிபுணர்கள் மற்றும் தமிழ்நாடு அரசின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்

தமிழ்நாடு முழுவதும் ஓமைக்கிரான் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவீரபடுத்துவது  குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது

 தமிழகத்தில் இதுவரை 141 நபர்களுக்கு ஓமைக்கிரான் தொற்றுஅறிகுறி  உறுதி செய்யப்பட்டுள்ளது.. சென்னையில் மட்டும் நேற்று 397பேருக்கு கொரனோ தொற்று உறுதிசெய்யபட்டுள்ளது.

WHO சவுமியா சுவாமிநாதன் காணொளி காட்சி வழியாக முதல்வரின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார்.இந்த ஆலோசனை கூட்டத்திற்கு இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கபடுமா என்பது குறித்து முடிவு எடுக்கபடும் எதிர்பார்க்கபடுகிறது.


Next Story

மேலும் செய்திகள்