திருச்சியில் முதல்வர் இன்று சுற்றுப்பயணம் - பலத்த போலீஸ் பாதுகாப்பு

திருச்சியில் சுமார் ஆயிரத்து 85 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்ட உள்ளார்.
x
திருச்சியில் சுமார் ஆயிரத்து 85 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்ட உள்ளார்.
தஞ்சையில் இருந்து இன்று மதியம் திருச்சி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தாயனூர் அருகே நடைபெறும், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்கிறார். இந்த விழாவில், 45 ஆயிரத்து 344 பயனாளிகளுக்கு, 327 கோடியே 48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை அவர் வழங்க இருக்கிறார். இதேபோல், திருச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில், 153 கோடியே 22 லட்சம் ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற பணிகளை அவர் தொடங்கி வைக்கிறார். மேலும், பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய திட்டம் உள்ளிட்ட, சுமார் ஆயிரத்து 85 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார். முதலமைச்சரின் வருகையையொட்டி, திருச்சியில் சுமார் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்