கன்றுடன் காவல் நிலையத்தில் பசு - நீதிக்காக காத்திருக்கும், பசுவின் பரிதாபம்
யாருக்கு சொந்தம் என தகராறு ஏற்பட்டதால், காவல் நிலையத்தில் கன்று குட்டியுடன் பசுமாடு கட்டப்பட்ட ருசிகர சம்பவம் நடந்துள்ளது.
யாருக்கு சொந்தம் என தகராறு ஏற்பட்டதால், காவல் நிலையத்தில் கன்று குட்டியுடன் பசுமாடு கட்டப்பட்ட ருசிகர சம்பவம் நடந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம், வானூர் அடுத்த திருச்சிற்றம்பலத்தைச் சேர்ந்த 60 வயதான அசோக் என்பவர், வளர்த்த சினைப்பசு காணாமல் போயுள்ளது. இதனிடையே, கூட்ரோட்டை சேர்ந்த 28 வயது விக்னேஷ்வரன் வீட்டில், கன்று ஈன்ற நிலையில் நின்றுள்ளது. தனது பசுமாடு என கூறிய நிலையில், அதை அவர் தர மறுத்துள்ளார். அசோக், பசுவை வீட்டுக்கு ஓட்டிவந்த நிலையில், தனது மாடு எனக்கூறி விக்னேஷ்வரன் தகராறு செய்துள்ளார். இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்திய ஆரோவில் போலீசார், வழக்கு முடியும் வரை பசுவையும், கன்றையும் பிரிக்க வேண்டாம் எனக் கூறி காவல் நிலையத்தில் கட்டிவைத்து பராமரித்து வருகின்றனர். காவல் நிலையத்தில், வாகனங்கள் மட்டுமே நிறுத்தப்பட்ட நிலையில், கன்றுக்கும், பசுவுக்கும் மனுநீதி சோழன் போல், இரக்கம் காட்டும் சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பாகி உள்ளது.
Next Story