ஸ்ரீபெரும்புதூர் பாக்ஸ்கான் தொழிற்சாலை - ஆப்பிள் நிறுவனம் அதிரடி ஆய்வு

ஸ்ரீபெரும்புதூரில், பாக்ஸ்கான் நிறுவன ஊழியர்களின் தங்குமிடங்கள் மற்றும் உணவுக் கூடங்கள் நிறுவன தரத்தில் இல்லை என்று ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது.
x
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களை,  ஒப்பந்த அடிப்படையில், பாக்ஸ்கான் நிறுவனம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தொழிற்சாலையில் உற்பத்தி செய்து அளிக்கிறது. இதில் சுமார் 2,000 பேர் பணிபுரிகின்றனர்.  டிசம்பர் 15 அன்று மதிய உணவு உட்கொண்ட சுமார் 200 பெண் தொழிலாளர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு, அருகே உள்ள மருத்துமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து பாக்ஸ்கான் தொழிற்சாலையில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் தங்குமிடங்கள், உணவு விடுதிகளை ஆய்வு செய்ய தணிகைக் குழு ஒன்றை ஆப்பிள் நிறுவனம் அனுப்பி வைத்தது. தொழிலாளர்களின் தங்குமிடங்கள் மற்றும் உணவு விடுதிகள், தங்கள் நிறுவனத்தின் தரத்தில் இல்லை என்று கண்டறிந்துள்ளதாக, ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது. தரத்தை உயர்த்த இவை தொடர் கண்காணிப்பில் வைக்கப்படும் என்று கூறியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்