பிப்ரவரியில் 3வது அலை - எச்சரிக்கை

இந்தியாவில் பிப்ரவரி மாத இறுதியில் மூன்றாம் அலை தொடங்கலாம் என ஐஐடி பேராசிரியர் கணித்துள்ளார்.
x
பிப்ரவரியில் 3வது அலை - எச்சரிக்கை

இந்தியாவில் பிப்ரவரி மாத இறுதியில் மூன்றாம் அலை தொடங்கலாம் என ஐஐடி பேராசிரியர் கணித்துள்ளார்.நாட்டில் ஒமிக்ரான் வகை கொரோனா திரிபு உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இந்த சூழலில், கொரோனா பரவல் குறித்து ஆய்வு செய்த குழுவின் இடம்பெற்றுள்ள கான்பூர் ஐஐடி பேராசிரியர் மணீந்திர அகர்வால் புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.அதன்படி, இந்தியாவில் மூன்றாவது அலை பிப்ரவரி மாத இறுதியில் தொடங்க வாய்ப்புள்ளதாகவும் நாளொன்றுக்கு ஒன்று முதல் ஒன்றரை லட்சம் வீதம் பாதிப்பு எண்ணிக்கை பதிவாகலாம் எனவும் தெரிவித்துள்ளார்.நல்வாய்ப்பாக இரண்டாம் அலையை ஒப்பிடும் போது, இந்த முறை பாதிப்பு குறைவாக இருக்கும் என குறிப்பிட்டுள்ள அவர்,இதுவரை கிடைத்துள்ள தகவலின்படி, டெல்டா திரிபு தீவிரத்தைவிட ஒமிக்ரான் திரிபின் தீவிரம் குறைவாகவே இருக்கும் என தெரிவித்தார்.பரவலை கட்டுப்படுத்த இரவுநேர ஊரடங்கு, கூட்டம் கூடுவதில் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என அகர்வால் கேட்டுக்கொண்டார். 


Next Story

மேலும் செய்திகள்