"இளைஞர் தொண்டையில் உணவு சிக்கி இருந்ததாக தகவல்" - ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்

"இளைஞர் தொண்டையில் உணவு சிக்கி இருந்ததாக தகவல்" - ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்
x
"இளைஞர் தொண்டையில் உணவு சிக்கி இருந்ததாக தகவல்" - ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் 

இளைஞர் மணிகண்டன் உயிரிழந்த சம்பவத்தில் போலீசாருக்கு எந்த வித தொடர்பும் இல்லை என ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திக் தெரிவித்துள்ளார். கல்லூரி மாணவன் மணிகண்டன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் விளக்கம் அளித்துள்ளார். கார்த்திக்கின் செல்போனில் அரிவாள் உள்ளிட்ட படங்கள் இருந்ததால் அதுகுறித்து விசாரணைக்கு அழைத்து வந்ததாகவும், அவரின் தாய் முன்பாகவே ஒன்றரை மணி நேரம் விசாரணை நடந்தது என்றும் தெரிவித்துள்ளார்.மணிகண்டனை எச்சரித்து அனுப்பி வைத்த அனைத்து காட்சிகளும் காவல் நிலையத்தில் உள்ளதாகவும், 5 மணி நேரத்திற்கு பிறகே அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நுரையீரலில் ரத்தக் கசிவு மற்றும் தொண்டையில் உணவு சிக்கி இருந்ததாக உடற்கூராய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டிய அவர், போலீசாருக்கும் இந்த மரணத்திற்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்றும் கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்