வைரத்திற்கு ஆசைப்பட்டு தங்கத்தை பறிகொடுத்த நபர்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே வைர நகையை குறைந்த விலைக்கு விற்பனை செய்வதாக கூறிய ஆசை வார்த்தையை நம்பி 9 சவரன் நகையை பறிகொடுத்ததாக பாதிக்கப்பட்டவர் புகார் கூறியுள்ளார்.
x
ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த கண்ணனை பேருந்து நிலையத்தில் சந்தித்த அடையாளம் தெரியாத நபர், தனது செல்போன் ஸ்விட்ச் ஆகி விட்டதாக கூறி அவரது செல்போனை வாங்கி பேசியுள்ளார். பின்னர், தான் சரவணா ஸ்டோர் அருகில் நகை கடை வைத்திருப்பதாகவும், குறைந்த விலைக்கு நகைகளை வாங்கி விற்பதாகவும் கூறியுள்ளார். தன்னிடம் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைர நகை இருப்பதாகவும், அதற்கு ரசீது இல்லை என்பதால் 3 லட்சம் ரூபாய் விற்பனை செய்ய உள்ளதாகவும் கூறியுள்ளார். அவரின் பேச்சில் மயங்கிய கண்ணன், கழுத்தில் அணிந்திருந்த தங்கச் செயினையும், 4 மோதிரங்களையும் கொடுத்து அந்த வைர நகையை வாங்கியுள்ளார். குறைந்த விலைக்கு வைர நகைகளை விற்பனை செய்தால் போலீசார் பிடித்து கொள்வார்கள் எனபதால் தனியாக சென்று பார்க்கும்படி கூறிவிட்டு அந்த நபர் சென்றுள்ளார். சிறிது நேரத்திற்கு பிறகு வைர நகையை பார்த்த கண்ணனுக்கு அது போலியானது என தெரிய வந்தது. ஆசை வார்த்தைக்கு மயங்கி 9 சவரன் நகையை பறிகொடுத்த கண்ணன்,  அளித்த புகாரின் பேரில் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்