தமிழ் மகன் உசேன் அரசியல் பயணம்

அதிமுக தற்காலிக அவைத்தலைவராக பதவியேற்றுள்ள தமிழ்மகன் உசேன் பற்றி தற்போது பார்க்கலாம்.
x
தமிழ் மகன் உசேன் அரசியல் பயணம் அதிமுக தற்காலிக அவைத்தலைவராக பதவியேற்றுள்ள தமிழ்மகன் உசேன் பற்றி தற்போது பார்க்கலாம்.1957 ஆம் ஆண்டு நேசமணி நாடார் தலைமையில் நடைபெற்ற எல்லைப்போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றவர்.எம்ஜிஆர் தனிக்கட்சி தொடங்கக்கோரி ரத்த கையெழுத்து தீர்மானம் போட்டு அவரிடம் நேரில் வழங்கினார். அதிமுக தொடங்கும் போது எம்.ஜி.ஆருடன் இணைந்து கையெழுத்து போட்ட 11 பேரில் தமிழ் மகன் உசேனும் ஒருவர்.1972ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார்.தொடர்ந்து 14 ஆண்டுகள் குமரி மாவட்டச் செயலாளராக பதவி வகித்தார்.2010ல் அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற செயலாளராக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் நியமனம் செய்யப்பட்டார்.பின்னர் அதிமுக ஆட்சிமன்ற குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.வக்பு வாரிய தலைவராகவும் தமிழ்மகன் உசேன் பதவி வகித்துள்ளார்.68 ஆண்டுகள் தொடர்ந்து அரசியலில் இருந்த தமிழ் மகன் உசேனுக்கு 2021ம் ஆண்டிற்கான தந்தை பெரியார் விருதை தமிழ்நாடு அரசு வழங்கியது.

Next Story

மேலும் செய்திகள்