16 வயது சிறுமிக்கு நடக்கவிருந்த திருமணம் - உரிய நேரத்தில் தடுத்து நிறுத்திய அதிகாரிகள்
கடலூர் அருகே 16 வயது சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
கடலூர் அருகே 16 வயது சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். காட்டுமன்னார்கோவில் அடுத்த உத்திரசோலை கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்ற இளைஞருக்கு 16 வயது சிறுமியுடன் திருமணம் நடக்க இருந்தது. இதுகுறித்த தகவல் சைல்டு லைன் மற்றும் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் மற்றும் போலீசார் திருமணத்தை உடனடியாக தடுத்து நிறுத்தினர். பின்னர் இரு வீட்டாரையும் எச்சரித்ததோடு சமூக நலத்துறை அலுவலகத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டனர்.
Next Story
