பல்வேறு இடங்களில் விட்டு விட்டு பெய்த கனமழை - வாகனங்களை இயக்க ஓட்டுநர்கள் சிரமம்

பல்வேறு இடங்களில் விட்டு விட்டு பெய்த கனமழை - வாகனங்களை இயக்க ஓட்டுநர்கள் சிரமம்
பல்வேறு இடங்களில் விட்டு விட்டு பெய்த கனமழை - வாகனங்களை இயக்க ஓட்டுநர்கள் சிரமம்
x
பல்வேறு இடங்களில் விட்டு விட்டு பெய்த கனமழை - வாகனங்களை இயக்க ஓட்டுநர்கள் சிரமம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. வட சென்னையில் திருவொற்றியூர், மணலி, தண்டையார்பேட்டை, ராயபுரம், வண்ணாரப்பேட்டை பகுதிகளில் பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்தது. சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடி வரும் நிலையில் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஆங்காங்கே சாலையோரத்தில் தஞ்சமடைந்தனர். இதே போல் சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம், திநகர் மற்றும் புறநகர் பகுதிகளான கோயம்பேடு , நெற்குன்றம், மதுரவாயல் , வானகரம், போரூர், ராமாபுரம், வளசரவாக்கம், உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடைவிடாமல் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் கோயம்பேட்டில் இருந்து பூந்தமல்லி செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே மழை நீர் குளம் போல் தேங்கியது. 

Next Story

மேலும் செய்திகள்