இல்லம் தேடி தடுப்பூசி திட்டம்: "இந்தியாவிற்கே வழிகாட்டியாக உள்ளது" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

இல்லம் தேடி தடுப்பூசி திட்டம் இந்தியாவிற்கே வழிகாட்டியாக அமைந்துள்ளது என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இல்லம் தேடி தடுப்பூசி திட்டம்: இந்தியாவிற்கே வழிகாட்டியாக உள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
x
சென்னை தேனாம்பேட்டையில்  செய்தியாளர்களை சந்தித்த அவர், பொது இடங்களுக்கு வருவோர் கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற பொது சுகாதாரத்துறை அறிவிப்பாலேயே தடுப்பூசி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். அப்போது,சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதனை தொடர்ந்து சந்திப்பு நிறைவடைந்தவுடன் மருத்துவ கல்லூரி முதல்வரை தொடர்பு கொண்ட மா.சுப்பிரமணியன் உடனடியாக அந்த சுற்றறிக்கையை நிறுத்தி வைக்குமாறு கூறினார். மேலும் தனது மேற்பார்வையின்றி இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாகவும் , பல் சிகிச்சைக்கான கட்டணம் பழைய முறையிலேயே தொடருவதற்கான புதிய அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்