கோவை மாணவி தற்கொலை விவகாரம் - பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனுக்கு நிபந்தனை ஜாமின்

கோவையில் 12 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனுக்கு போக்சோ நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
கோவை மாணவி தற்கொலை விவகாரம் - பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனுக்கு நிபந்தனை ஜாமின்
x
கோவையில் 12 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனுக்கு போக்சோ நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. போக்சோ நீதிமன்றத்தில் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் தாக்கல் செய்த ஜாமின் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது இறந்த மாணவியின் பெற்றோர் தரப்பில் ஆஜரான வழகறிஞர் மீரா ஜாக்சனுக்கு  ஜாமின் கொடுக்க எதிர்ப்பு தெரிவித்தார். இதே போல் அரசு தரப்பு வழக்கறிஞரும் கடும் எதிர்ப்பை பதிவு செய்தார். ஆனால் மீரா ஜாக்சனுக்கு நிபந்தனை  ஜாமின் வழங்கி போக்சோ நீதிமன்ற நீதிபதி குலசேகரன் உத்தரவிட்டார். கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஞாயிறு தோறும் கையெழுத்திட வேண்டும்  என  நிபந்தனை விதித்தார். பின்னர், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு இடைக்கால இழப்பீடாக 5 லட்ச ரூபாயை, ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் எனவும் உத்திரவிட்டார். இதனிடையே இந்த வழக்கில், 
பாலியல் துன்புறுத்தல் அளித்த ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனைத்து மகளிர் காவல் துறையினர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். காவல் துறை தாக்கல் செய்த மனு மீது வியாழன் அன்று, கோவை  போக்சோ நீதிமன்றம் விசாரிக்கிறது. 

Next Story

மேலும் செய்திகள்