உகாண்டா பாரா பேட்மிண்டன் போட்டி - தமிழக வீரர்கள் 12 பதக்கங்களை கைப்பற்றினர்

உகாண்டாவில் நடைபெற்ற பாரா பாட்மின்டன் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
உகாண்டா பாரா பேட்மிண்டன் போட்டி - தமிழக வீரர்கள் 12 பதக்கங்களை கைப்பற்றினர்
x
உகாண்டாவில் நடைபெற்ற பாரா பாட்மின்டன் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. உகாண்டாவில் சர்வதேச பாரா பாட்மின்டன் போட்டி கடந்த வாரம் நடைபெற்றது.இதில்  தமிழகத்தில் இருந்து 9 பேர் கலந்துக் கொண்டனர். இந்தியா சார்பாக வென்ற 45 பதக்கங்களில் தமிழக வீரர்கள் 12 பதக்கங்களை பெற்று இருந்தனர். இதனையடுத்து சென்னை திரும்பிய வீரர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வீரர்கள்,உகாண்டாவில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தமிழக அரசு சார்பாக அமைச்சர் மெய்யநாதன் உடனடியாக தொடர்பு கொண்டு பேசியாக தெரிவித்தவர்கள், தங்களுக்கு ராணுவ  பாதுகாப்பு வழங்கப்பட்டதாகவும் கூறினர். 


Next Story

மேலும் செய்திகள்