முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கேரளா பகுதிக்கு 4 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுவதால் கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்க இடுக்கி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்
x
முல்லைப்பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தற்பொழுது அணையின் நீர்மட்டம் 141 புள்ளி 65 அடியாக உள்ள நிலையில் அணைக்கு நீர்வரத்து 6ஆயிரத்து 500 கன அடியாக உள்ளது. தமிழகப் பகுதிக்கு 2ஆயிரத்து 300 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.  கேரளா பகுதிக்கு 7 மதகுகள் வழியாக 4 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோரங்களில் வசிப்பவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என  இடுக்கி மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்