போயஸ் இல்லம் அரசுடமை ​ஆக்கப்பட்ட விவகாரம் - செல்லாது என அறிவிக்க கோரிய வழக்கில் தீர்ப்பு

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தை அரசுடமையாக்கிய உத்தரவை செல்லாது என அறிவிக்க கோரிய வழக்குகள் மீது சென்னை உயர் நீதிமன்றம் இன்று புதன்கிழமை தீர்ப்பளிக்க உள்ளது.
போயஸ் இல்லம் அரசுடமை ​ஆக்கப்பட்ட விவகாரம் - செல்லாது என அறிவிக்க கோரிய வழக்கில் தீர்ப்பு
x
இது குறித்து தீபா, தீபக் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணையின் போது, தனிநபர் சொத்துக்களை கையகப்படுத்துவது தொடர்பாக  சட்டம் இயற்ற அரசுக்கு அதிகாரமில்லை என வாதிடப்பட்டது. தமிழக அரசு தரப்பில், வேதா நிலையத்தை கையகப்படுத்தும் முன்பே அனைத்து தரப்பு கருத்துக்களையும் கேட்டறிந்ததாக வாதிடப்பட்டது.  அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட விதத்திலும் பல்வேறு பிரச்சினைகளை ஜெயலலிதா எதிர் கொண்டபோது தீபா, தீபக் ஆகியோர் உறுதுணையாக இல்லை எனவும் கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சேஷசாயி வழக்குகளின் மீதான தீர்ப்புகளை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார். இந்நிலையில், இன்று புதன்கிழமையன்று, பிற்பகல் 2:15 மணிக்கு இந்த வழக்குகளில் தீர்ப்பளிக்கப்பட உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்