"நர்ஸ்க்கு பதில் பணியாளர் ஊசி போடுகிறார்" - பெண் உதவி பணியாளர் பேச்சால் மக்கள் அதிர்ச்சி

"நர்ஸ்க்கு பதில் பணியாளர் ஊசி போடுகிறார்" - பெண் உதவி பணியாளர் பேச்சால் மக்கள் அதிர்ச்சி
x
"நர்ஸ்க்கு பதில் பணியாளர் ஊசி போடுகிறார்" - பெண் உதவி பணியாளர் பேச்சால் மக்கள் அதிர்ச்சி
 
தென்காசியில் சுகாதாரம் குறித்து ஆய்வு செய்யும்  பணியாளர் கொரோனா தடுப்பூசி போட்டதாக சர்ச்சை எழுந்த நிலையில் அதுகுறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள சாம்பவர்வடகரை பகுதியில் வீடுதேடி மெகா தடுப்பூசி போடும் திட்டம் தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் சாம்பவர்வடகரை பகுதியில் சுகாதாரம் குறித்து ஆய்வு செய்ய ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் மாரியம்மாள் என்பவர் ராமலெட்சுமி என்ற பெண்ணுக்கு கொரோனா தடுப்பூசி போட்டதாக தெரிகிறது. இதையடுத்து செவிலியர் போட வேண்டிய ஊசியை பணியாளர் எப்படி  போடலாம் என ராமலெட்சுமியின் கணவர் திருமலைச்சாமி கேட்டபோது, தான் 20க்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி போட்டுள்ளதாக அவர் கூறியிருக்கிறார். இதனால் வாக்குவாதம் ஏற்படவே, தகவல் அறிந்து வந்த சுகாதார ஆய்வாளர் மாரியப்பன் இருதரப்பையும் சமாதானம் செய்து வைக்க முயற்சித்துள்ளார். இதனை ஏற்காத மக்கள், காவல்துறையை நாடவே, அவர்களும் சமாதானம் பேசி அனுப்பி வைத்த‌தாக தெரிகிறது. இந்த நிலையில், திருமலைச்சாமி வாக்குவாதம் செய்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.  

Next Story

மேலும் செய்திகள்