தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள்; தகவல் தரும் பொதுமக்களுக்கு பரிசு - தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் பற்றி தகவல் தரும் பொதுமக்களுக்கு பரிசு வழங்கப்படும் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள்; தகவல் தரும் பொதுமக்களுக்கு பரிசு - தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு
x
தமிழகத்தில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும், பிளாஸ்டிக் டம்ளர், தண்ணீர் பாக்கெட்டுகள் உள்ளிட்ட பொருட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் குடியிருப்பு, வணிக நிறுவனங்களுக்கு ஒரு சிறிய இடத்தில் சட்டவிரோதமாக செயல்படும். தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் உற்பத்தியாளர்களை அடையாளம் காண்பது கடினமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்ட பொதுமக்கள், இத்தகைய பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்பவர்கள் குறித்து தகவல் அளிக்குமாறு மாசு கட்டுப்பாடு வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது. அதன்படி, மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மின்னஞ்சல், தொலைபேசி, வாட்ஸ் ஆப் மற்றும் கடிதம் மூலம் புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளது. மேலும், புகார் தெரிவிப்பவர்களின் ரகசிய தன்மை கண்டிப்பாக பராமரிக்கப்படுவதுடன், சுற்றுச்சூழல் மீது அக்கறைக்காக பாராட்டு மற்றம் வெகுமதி வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்