சட்ட ஒழுங்கை காக்க நடவடிக்கை தேவை - ஒ.பி.எஸ்

காவல் பணியில் ஈடுபட்ட பூமிநாதன், கனகராஜ் ஆகியோரின் உயிரிழப்பு, சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறதா என கேள்வி எழுப்புவதாக உள்ளது என முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
சட்ட ஒழுங்கை காக்க நடவடிக்கை தேவை - ஒ.பி.எஸ்
x
காவல் பணியில் ஈடுபட்ட பூமிநாதன், கனகராஜ் ஆகியோரின் உயிரிழப்பு, சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறதா என கேள்வி எழுப்புவதாக உள்ளது என முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலைய எஸ்.எஸ்.ஐ. பூமிநாதன், சரமாரி அரிவாளால் வெட்டிக் கொல்லப்பட்டதை அறிந்து வேதனை அடைந்ததாக கூறியுள்ளார். இதேபோல், மோட்டார் வாகன ஆய்வாளர் கனகராஜின் மீது வாகனத்தை ஏற்றிவிட்டு தப்பிய செய்தியறிந்து சொல்லொணாத் துயரம் அடைந்ததாக கூறியுள்ள ஒ.பன்னீர்செல்வம், பூமிநாதன் குடும்பத்துக்கு அறிவித்தது போல், கனகராஜின் குடும்பத்துக்கும் ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதி அறிவித்து, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும், வேன் ஏற்றியது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார். நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு காரணியான சட்ட ஒழுங்கை பாதுகாப்பதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஒ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்