59 நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்து - முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தங்கள் பரிமாற்றம்

முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் 35 ஆயிரத்து 208 கோடியில் 59 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
59 நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்து - முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தங்கள் பரிமாற்றம்
x
கோவை கொடிசியா அரங்கில் முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு என்ற தலைப்பில் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் 35 ஆயிரத்து 208 கோடி மதிப்பில் 59 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. வான்வெளி மற்றும் பாதுகாப்பு துறையில் 485 கோடி முதலீட்டில் 7 நிறுவனங்களுடன் போடப்பட்ட ஒப்பந்தங்களும் இதில் அடங்கும். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 76 ஆயிரத்து 795 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மேலும், 13 ஆயிரத்து 413  கோடி ரூபாய் மதிப்பில்  13 புதிய நிறுவனங்களுக்கும் அடிக்கல் நாட்டிய முதலமைச்ர் ஸ்டாலின், பணிகள் முடிக்கப்பட்ட 10 நிறுவனங்களை தொடங்கி வைத்தார்.

முன்னதாக, முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு மாநாட்டில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியை ரிப்பன் வெட்டி முதலமைச்சர் தொடங்கி வைத்தார். பின்னர் அங்கு காட்சிபடுத்தப்பட்டிருந்த பொருட்களை முதலமைச்சர் பார்வையிட்டார். வான்வெளி மற்றும் பாதுகாப்பு சார்ந்த தொழில் நிறுவனங்களின் கையேட்டையும் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார். 

22 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முதலீடுகள் மூலம், இளைஞர்களுக்கு சொந்தஊர் அருகிலேயே வேலைவாய்ப்பு கிடைக்கும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்