குடியிருப்பு புகுதியில் தேங்கி நின்ற மழை நீர் - நீரில் மூழ்கி இரண்டரை வயது குழந்தை பலி

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில், வீட்டின் அருகில் தேங்கி நின்ற தண்ணீரில் மூழ்கி இரண்டரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குடியிருப்பு புகுதியில் தேங்கி நின்ற மழை நீர் - நீரில் மூழ்கி இரண்டரை வயது குழந்தை பலி
x
பண்ருட்டி ஆர்.எஸ்.மணி நகரை சேர்ந்த சந்திரன் என்பவரது இரண்டரை வயது மகன், விளையாடிக் கொண்டிருந்தபோது, வீட்டின் அருகே தேங்கியிருந்த மழை நீரில் தவறி விழுந்த‌தாக கூறப்படுகிறது. அக்கம் பக்கத்தினர் குழந்தையை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் குழந்தை ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்