கழுத்தை நெரித்து மனைவி கொலை - கணவன் கைது

மீஞ்சூர் அருகே பெண் ஒருவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கழுத்தை நெரித்து மனைவி கொலை - கணவன் கைது
x
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த அனுப்பப்பட்டு ரயில் நிலையம் அருகில் கடந்த 13ஆம் தேதி இளம்பெண் ஒருவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். சடலத்தை கைப்பற்றி மீஞ்சூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், கொலை செய்யப்பட்டவரின் பெயர் மீனா என்பதும், இவரது கணவர் முதர்சன் என்பவர்,  இவரை  கொலை செய்துவிட்டு தப்பியோடியதும் தெரியவந்துள்ளது. தகாத உறவால் இந்த கொலை அரங்கேறி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்