வெள்ளம், வறட்சியை கையாளும் திட்டம்; வெளிநாடுகளைபோல் அமல்படுத்த கோரிக்கை - உயர்நீதிமன்ற மதுரைகிளையில் மனு தாக்கல்

வெள்ளம் மற்றும் வறட்சியை கையாளும் வகையில் நகரங்களை கட்டமைக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
வெள்ளம், வறட்சியை கையாளும் திட்டம்; வெளிநாடுகளைபோல் அமல்படுத்த கோரிக்கை - உயர்நீதிமன்ற மதுரைகிளையில் மனு தாக்கல்
x
வெள்ளம் மற்றும் வறட்சியை கையாளும் வகையில் நகரங்களை கட்டமைக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழகத்தில் உள்ள 50 சதவீதம் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதால், மழை காலங்களில் வெள்ள பாதிப்பு ஏற்படுவதாக குறிப்பிட்டிருந்தார்.
சீனா, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் நடைமுறையில் உள்ள மழை நீர் சேமிப்பு மற்றும் வடிகால் திட்டத்தை இந்தியாவில் அமல்படுத்த வேண்டும் என்றும் 1950ஆம் ஆண்டு அரசு ஆவணத்தின் அடிப்படையில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் கோரிக்கை விடுத்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது போன்ற திட்டங்களை செயல்படுத்துவது அரசின் கொள்கை ரீதியான முடிவு என கருத்து தெரிவித்தனர். மேலும், இந்த வழக்கு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்