கோழிப்பண்ணைகளில் புகுந்த வெள்ள நீர் - 4000 வளர்ப்பு கோழிகள் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் இருந்த கோழிப்பண்ணைகளில் வெள்ள நீர் புகுந்ததால் 4000 கோழிகள் உயிரிழந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் இருந்த கோழிப்பண்ணைகளில் வெள்ள நீர் புகுந்ததால் 4000 கோழிகள் உயிரிழந்துள்ளது. தொடர்ந்து தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் இரு கரையோரம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த நிலையில் சின்ன மடம் நரசிங்கபுரம் பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த கோழிப்பண்ணைகளில் தண்ணீர் புகுந்தது. இதில் 4000 வளர்ப்பு கோழிகள் உயிரிழந்துள்ளது. கிராமத்திற்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
Next Story