தொடர் மழை - வைகை அணைக்கு நள்ளிரவில் கிடுகிடுவென நீர்வரத்து உயர்வு

தொடர்ந்து மழை பெய்து வருவதால், தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
x
தொடர்ந்து மழை பெய்து வருவதால், தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. வைகை ஆற்றில் இருந்து வினாடிக்கு 2ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்படுகிறது. மேலும், அணைக்கு பாசன கால்வாய் வழியாக வரும் ஆயிரத்து 600 கனஅடி தண்ணீரும், 58 ம் கால்வாயில் இருந்து வரும் 150 கனஅடி தண்ணீரும் அப்படியே வெளியேற்றப்படுகிறது. வைகை அணை முழுக்கொள்ளளவை எட்டியுள்ளதால், ஒரே நேரத்தில் 4 ஆயிரம் கனஅடிக்கும் மேல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர். 


Next Story

மேலும் செய்திகள்