கிணற்றுக்குள் கார் பாய்ந்த விபத்து - சிசிடிவி காட்சி வெளியீடு

தருமபுரி அருகே கிணற்றிற்குள் கார் பாய்ந்து நிகழ்ந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன..
கிணற்றுக்குள் கார் பாய்ந்த விபத்து - சிசிடிவி காட்சி வெளியீடு
x
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே நேற்று மாலை சேலம் மாவட்டத்தில் இருந்து பெங்களூர் நோக்கி சென்ற கார் ஒன்று ஓட்டனேர் கட்டுப்பாட்டை இழந்து  தேசிய நெடுஞ்சாலை அருகில் இருந்த கிணற்றில் பாய்ந்து மூழ்கியதில் காருக்குள் வீரா (42) அவரது மகள் சுஷ்மிதா (13) ஆகிய இருவர் உயிரிழந்தனர்.பின்னர் தீயணைப்பு துறை மற்றும் காவல்துறையினர்  6 மணிநேர போராட்டத்திற்கு பின்னர் கிணற்றில் விழுந்த காரை மீட்டு வீரன் அவரது மகள் சுஷ்மிதா ஆகியோரின் சடலங்கள் மீட்கப்பட்டு தர்மபுரி அரசு மருத்தவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்ப பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் தற்பொழுது விபத்து நடந்த இடத்தில் இருந்த ஒரு கடையில் உள்ள சிசிடிவி கேமராவில் சாலையில் இருந்தகிணற்றில்பாய்ந்துவிழுதும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது


Next Story

மேலும் செய்திகள்