தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி உயிரிழந்த மூவர் - இரட்டையர்கள் உள்பட மூவரின் உடல்களும் மீட்பு

தென்பெண்ணை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மூவரின் உடலும் மீட்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் அவர்கள் செல்பி எடுத்த காட்சி வெளியாகி உள்ளது.
தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி உயிரிழந்த மூவர் - இரட்டையர்கள் உள்பட மூவரின் உடல்களும் மீட்பு
x
தென்பெண்ணை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மூவரின் உடலும் மீட்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் அவர்கள் செல்பி எடுத்த காட்சி வெளியாகி உள்ளது. கடலூர் நெல்லிக்குப்பம் அருகே முள்கிராம்பட்டுவை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட இளையோர் தென்பெண்ணை ஆற்றில் குளித்தனர். அப்போது, ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட லோகேஷை காப்பாற்ற வேண்டி மாதவன் தண்ணீரில் குதித்துள்ளார். இதில், இருவரும் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அவர்களை மீட்கும் பொருட்டு, மாதவனின் சகோதரி மாளவிகாவும் ஆற்றில் குதித்தபோது அடித்துச் செல்லப்பட்டார். மூவரின் உடலும் மீட்கப்பட்டது. உடலைப் பார்த்த உறவினர்கள் கதறி அழுதனர். ஆற்றில் குளித்த இரட்டையர்களான, மாதவனும், மாளவிகாவும் செல்பி வீடியோ எடுத்த காட்சி தற்போது வெளியாகி சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்