பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்கள் மீது நடவடிக்கை - அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு ஆய்வு
சென்னை தி.நகரில் இருந்து சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவித்த பொது மக்களிடம் அமைச்சர் கே.என்.நேரு நேரடியாக பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையில் 3 கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இது 24 மணி நேரமும் சுழற்சி முறையில் இயங்குகிறது. இதனை இன்று தமிழக அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர் பாபு ஆகிய இருவரும் நேரில் ஆய்வு செய்தனர். அவர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் உரிய விளக்கம் கொடுத்தனர். புகார் பெறும் முறை, அதை உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தீர்வு காணப்படுகிறது என கூறினார். தொலைபேசி மற்றும் சமூக வலைதளம் மூலம் புகார் பெறப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது. தி.நகரில் இருந்து கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவித்தார். அதனை அமைச்சர் கே.என்.நேரு கேட்டு உடனடியாக தீர்க்கப்படும் என பேசினார்.
Next Story
